சொல் பொருள்
(பெ) வழித்தோன்றல்
சொல் பொருள் விளக்கம்
வழித்தோன்றல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Descendant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரும் 29,30 பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருவாகிய மறுவை அணிந்த கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய் அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/19-21 கடற்கு அப்புறத்தாயுள்ள நாட்டிலுள்ள பெறற்கரிய அமுதம்போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றலே (அதியமான் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்