சொல் பொருள்
(வி) 1.பின்னே செல், 2. பின்னே வா, 3. பின்தங்கு,
சொல் பொருள் விளக்கம்
1.பின்னே செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go behind, come behind, lag behind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மான் ஏறு உகளும் கானம் பிற்பட வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/3,4 ஆண்மான் துள்ளிவிளையாடும் காடு பின்னே செல்ல, நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் பெற்றுக்கொண்டு வருவோம்; அந்நாள் வரை இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட பகல் வரின் கவ்வை அஞ்சுதும் – அகம் 118/5,6 இயங்கும் முருகனை ஒப்பாகிய வலிய நாய் பின்னேவர பகலில் நீ வந்தால் ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/41-44 மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின் தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய் நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால் அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்