Skip to content

சொல் பொருள்

(வி) 1. (யானை) பேரொலி எழுப்பு

2. யானையைப் போல் முழக்கமிடு

சொல் பொருள் விளக்கம்

1. (யானை) பேரொலி எழுப்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

trumpet

make a loud noise like the roar ofan elephant

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/9

பெரிய ஆண்யானை முழக்கமிடும் சோலை

வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/13-15

வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றி

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் – ஐங் 55/1,2

கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூர்

கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162

கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236

பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *