சொல் பொருள்
(வி) 1. கெட்டுப்போ, அழிந்துபோ, 2. குற்றப்படு,
சொல் பொருள் விளக்கம்
1. கெட்டுப்போ, அழிந்துபோ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perish, get ruined
find fault
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமம் புகர்பட வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய் – கலி 12/16,17 காம இன்பம் கெட்டுப்போகும்படி அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே! அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி நோய் இலை ஆகியர் நீயே நின்_மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது கனவினும் பிரியா உறையுளொடு —————————– —————- வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே – பதி 89/12-20 அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு, நோயின்றி இருப்பாயாக நீயே! உன்னிடத்தில் அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல், கனவிலும் பிரியாத வாழ்க்கையோடு, —————————– ————————– ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன் மனைவியுடன் அழகுற விளங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்