சொல் பொருள்
(பெ) 1. புகுவதற்குரிய இல்லம், 2. புகலிடம்
சொல் பொருள் விளக்கம்
1. புகுவதற்குரிய இல்லம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
places one can reside
place of refuge, asylum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா நின்றாய் நின் புக்கில் பல – கலி 90/24,25 இது ஒன்றும் பழைய காலம் அல்ல, நீ உரைக்கும் பொய்ச்சூள் உனக்குப் பயன்படுவதற்கு, ஏடா! இங்கு நில்லாதே! உனக்குப் போவதற்குப் பல வீடுகள் உள்ளனவே!” துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6 குற்றமற்ற கேள்வியினையுடைய அந்தணர்க்குப் புகலிடம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்