சொல் பொருள்
புடைத்தெடுத்தாற் போலிருத்தல் – நலமாயிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
புடைத்தல் சுளகில் (முறத்தில்) இட்டு நொய்யும் நொறுங்கும், தூசியும், தும்பும், கல்லும் கட்டியும் விலக்குதல் ஆகும். புடைத்தெடுத்ததில் இவையெல்லாம் இராமல், தூயதும் நல்லதுமாகவே இருக்கும். அதனால், “இப்பொழுதுதான் உடல் புடைத்து எடுத்தாற் போலிருக்கிறது” எனப்படும் வழக்குண்டாயிற்று. நோய் நொடி, பிச்சுப்பிடுங்கல், அல்லு செல்லு இல்லாமல் நலமாகவும் அமைதியாகவும் இருக்கிறது என்னும் பொருளில் ‘புடைத்து எடுத்தாற்போல் இருக்கிறது’ என்னும் வழக்கு உண்டாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்