சொல் பொருள்
(பெ) 1. தக்கோலக்காய், 1. வால்மிளகு, 2. பாக்கு, 2. குதிரையின் கெச்சை, 3. கால் கொலுசு,கால் சிலம்பு, 4. கூடை,
சொல் பொருள் விளக்கம்
1. தக்கோலக்காய், 1. வால்மிளகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cubeb,, arecanut, Tinkling anklet of a horse, tinkling anklet of a woman, basket
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1.பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் அம் பொதி புட்டில் விரைஇ – திரு 190,191 பச்சிலைக்கொடியுடன் சாதிக்காயை நடுவே இட்டு, வேலன், அழகினையுடைய பொதிதலுள்ள தக்கோலக்காயைக் கலந்து நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி – கலி 96/16,17 ஒலிக்கின்ற கெச்சையைக் காலின் அடியில் அமைத்துக் கட்டியது ஒழுங்குபட்ட பொன்னாலான சதங்கையாக ஒலிக்கவும் கொண்ட அந்தக் குதிரையை ஓட்டி, அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே வருக எம் பாக_மகன் – கலி 80/8,9 பரல்கள் இட்ட உன் காற்கொலுசின் மணிகள் ஒலிக்க அங்கிருந்து இழுத்துக்கொண்டே இங்கே வருக என் பாகனாகிய மகனே! மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/7,8 அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை”; “கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்