சொல் பொருள்
(வி) 1. கூடு, உடலுறவுகொள், 2. சேர், இணை, 3. பொருந்து, அமை, 4. ஒத்ததாகு, ஏற்புடையதாகு, 5. கட்டு, 6. அளவளாவு, 7. உருவாக்கு, படை, 8. சேர், இணை
சொல் பொருள் விளக்கம்
1. கூடு, உடலுறவுகொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cohabit, copulate, join, unite, be fitted with, be suitable, tie, fasten, be associated with, keep company with;, create, combine, connect, link
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 125,126 துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன், பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக என்று கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி – பதி 12/13 கன்றுகளுடன் சேர்ந்த பெண்யானைகளைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்து வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 189,190 வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால் மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய, தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல் புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து அணர் செவி கழுதை சாத்தொடு – பெரும் 77-80 வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின் ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும், உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 215-218 அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின் வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து) முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை தொல் ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் நிலம்தருதிருவில் நெடியோன் போல – மது 761-763 தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள் அளவளாவும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று பூதம் புணர்த்த புதிது இயல் பாவை – நற் 192/9 பூதமாகிய தெய்வங்கள் உருவாக்கிய புதிதாகச் செய்யப்பட்ட பாவை துறைவன் தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – நற் 267/5,6 துறையைச் சேர்ந்தவன் தன்னோடு தலைவியைச் சேர்த்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்