சொல் பொருள்
(பெ) 1. சேர்க்கை, இணைப்பு, தொடர்பு, உறவு, 2. உடலுறவு, கலவி
சொல் பொருள் விளக்கம்
1. சேர்க்கை, இணைப்பு, தொடர்பு, உறவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
association, union, coition, sexual union
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி – குறி 212 பயங்கரமான பிளவுகள் நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்_கண் செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும் பயன் இன்று மன்று அம்ம காமம் – கலி 142/1-5 மனம் விரும்பிய உறவுக்காலத்தில், அதற்குரிய தழுவுதல் நிறைவுபெறாத அளவில், இருவருள் ஒருவரை அந்த உறவுக்கு அரிதானவராகப் பிரித்துவிடுவதால், ஆராய்ந்து பார்க்கும்போது, நரம்பை இயக்க, அதில் நின்ற பண்ணினுள் தோன்றிய இனிமையைச் செவி சுவைப்பதற்கு முன்னே, அந்த இசைப்பயன் கெட்டுப்போகும்படி, முறுக்கு அறுந்துபோகும் நரம்பைக்காட்டிலும் பயனற்றதாகும் காமம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்