சொல் பொருள்
(பெ) 1. சேர்க்கை, 2. (தோழியர்)கூட்டம், ஆயம், 3. வஞ்சனை, சூது
சொல் பொருள் விளக்கம்
1. சேர்க்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
joining, plot, scheme, conspiracy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84 தாழ்ப்பாழோடு சேரப்பண்ணின, பொருத்துவாய் (நன்றாக)அமைந்த சேர்க்கையுடன், பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் – பரி 11/89 பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியர் கூட்டத்தைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர் வயக்கு_உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/1-4 ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின் முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால் ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க, வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்