சொல் பொருள்
(பெ) 1. வாயில், 2. வாயிற்கதவு, 3. மதகு,
சொல் பொருள் விளக்கம்
1. வாயில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entrance, gate, door of the entrance, sluice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குடி நிறை வல்சி செம் சால் உழவர் நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 197,198 குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள் நடை பயின்ற பெரிய எருதுகளை வாயிலிலே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று, நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை – பதி 16/5-8 நல்ல அழகிய நெடிய கதவுகளைத் தாக்கிச் சிதைத்ததால் பன்றியைப் போலாகிய நுனி முறிந்துபோன கொம்புகளையுடைய, மதநீர் சொரிந்து, மிக்க சினம் கொண்டு கணைய மரங்களை ஒடித்துப்போடும் இளம் களிறுகள் முழங்கும் பாசறையில் புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் மெல் அவல் இருந்த ஊர்-தொறும் – மலை 449,450 அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும், (உழுது உழுது)மென்மையாகிப்போன விளைநிலங்களும், இருக்கும் ஊர்கள்தோறும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்