புன்கு என்பதுபுங்கமரம்
1. சொல் பொருள்
(பெ) புங்கமரம்
2. சொல் பொருள் விளக்கம்
சோரியாஸிஸ்ஸை குணப்படுத்தும் புங்கம் மரம் சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்க வல்லதும் உடலில் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த கூடியதும்,
பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமானது புங்கமரம், புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது என்ற இன்றைய மருத்துவக் குறிப்புகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Millettia pinnata, indian beech, Pongamia glabra, Pongame oiltree;
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இதன் பூ பொரிப்பொரியாக இருக்கும். தளிர்கள் செந்நிறத்திலிருக்கும். பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/5 பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை பெண்கள் தங்கள் மார்பில் தோன்றும் சுணங்கு என்ற அழகுத்தேமலை நீக்க, இதன் தளிரைப் பூசிக்கொள்வர். பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/5,6 பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை அழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தத் தேய்த்து பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் - மது:12/81 பொரி உரு உறழ புன்கு பூ உதிர - கலி 33/11 புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் - அகம் 116/6 பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅ - குறு 341/2 புன்கம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன தளிர் புன்கின் தாழ் காவின் - பொரு 196 நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல் - குறு 53/2 பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதே - ஐங் 347/3 பொரி பூ புன்கின் புகர் நிழல் வரிக்கும் - ஐங் 368/2 புன்கு பொரி மலரும் பூம் தண் பொழில் எல்லாம் - திணை50:14/1 பொரி சிதறி விட்டு அன்ன புன்கு - திணை150:64/4 மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே - தேவா-சம்:1421/4 பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே - தேவா-சம்:2149/4 முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே - கலிங்:78/2 உதிர் பூம் புன்கின் ஒருசிறை இரீஇ - உஞ்ஞை:36/140 புன்கும் நாவலும் புரள எற்றி - உஞ்ஞை:51/50
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்