புரவி என்பது குதிரை
1. சொல் பொருள்
(பெ) குதிரை, நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு
2. சொல் பொருள் விளக்கம்
குதிரையைப் பற்றியும் சங்க நூல்களில் பல பாடல்களில் செய்திகள் வருகின்றன . தேரில் பூட்டியும் இவர்ந்து போர் புரியவும் குதிரைகள் பயன்பட்டன . மழவர் என்றொரு வீரர் குதிரைகளை ஓட்டுவதில் சிறந்தவராகக் கருதப்பட்டனர் . மழவர் ஓட்டிய உருவக் குதிரை ” என்று அகநானூறு அவருடைய அழகிய வடிவான குதிரைகளைக் குறித்துக் கூறியுள்ளது . குதிரைகள் தமிழ்நாட்டிற்கு இறக்குமதியானதை மார்க்கோ போலோ பிற்காலத்தில் கூறியிருக்கிறார் . சங்க காலத்திலேயே குதிரை தமிழ்நாட்டில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதை நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் ” என்று வரும் பட்டினப் பாலைவரி குறிப்பிடுகின்றது . காவிரிப்பூம்பட்டினத்தில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. பிற்காலத்தில் காயல்பட்டினத் துறைமுகத்தில் குதிரைகள் கப்பல் வழியாக இறக்குமதியாயின . குதிரைகளில் வெள்ளைநிறக் குதிரைகளைச் சிறப்பாகக் கருதினர் .. ” பால் புரை புரவி நால்குடன் பூட்டி ” என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது .
பல்புரிந் தியறல் உற்ற நல்வினை
நூலமை பிறப்பின் நீல உத்திக்
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனை இய கொழுஞ்சோற் றார்கை
நிரலியைந் தொன்றிய செலவிற் செந்தினைக்
குரல்வார்ந் தன்ன குலவுத்தலை நன்னான்கு
வீங்குசுவல் மொசியத் தாங்கு நுகம் கழீஇப்
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடை வலவன் ஏவலின் இகுதுறைப்
புனல்பாய்ந் தன்ன வாமான் திண்டேர்க் -அகம் , 400 ,
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் செல்வதை விளக்கமாகக் கூறுகின்றது . சங்க காலத்திலேயே புரவி நூல் என்ற ஒரு நூல் குதிரைகளின் இலக்கணம் கூறியதெனத் தெரிகின்றது . நீல மணியாலாகிய நெற்றிச் சுட்டியும் அழகாகக் கழுத்து மயிர் வெட்டப்பட்டும் குதிரைகள் காணப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது . மார்க்கோ போலோ எழுதிய நூலில் சோழநாட்டில் இறக்குமதியான குதிரைகளுக்கு நெய்கலந்த சோறு அளிக்கப்பட்டதும் அதனால் குதிரை கள் விரைவில் மெலிவுற்று , வலிவற்றுப் போவதும் கூறப்பட்டுள்ளது . பொருத்தமற்ற உணவு கொடுத்ததன் காரணமாக குதிரைகளை இழந்து மேலும் மேலும் குதிரைகளை அரேபியாவிலிருந்து வாங்குவதையும் கூறுவதைக் காண்கிறோம் . சங்க காலத்திலேயிருந்தே இத்தகைய பொருந்தா உணவான நெய்கலந்த சோற்றைக் குதிரைக்களித்து வந்த செய்தி ( அகம், 400 ) குறிப்பிடத்தக்கது .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
horse
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 93,94
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165
வளை கண்டு அன்ன வால் உளை புரவி/துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி – பெரும் 488,489
பல புரவி நீறு உகைப்ப – மது 184
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து – மது 387
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி/வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 689,690
பணை நிலை முனைஇய பல் உளை புரவி/புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 93,94
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் – பட் 24
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி/நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் – மலை 574,575
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி/கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப – நற் 81/3,4
வால் உளை பொலிந்த புரவி/தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே – நற் 135/8,9
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப – நற் 181/11
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி – நற் 245/8
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி/நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர – ஐங் 422/1,2
கடும் பரி புரவி ஊர்ந்த நின் – பதி 41/26
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி/அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/9,10
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவி/கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி – பதி 80/13,14
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32
கால் வல் புரவி அண்டர் ஓட்டி – பதி 88/9
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51
புள் ஏர் புரவி பொலம் படை கைம்மாவை – பரி 11/52
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/32
திண் தேர் புரவி வங்கம் பூட்டவும் – பரி 20/16
பொங்கு புரவி புடைபோவோரும் பொங்கு சீர் – பரி 24/16
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி/நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/8,9
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் – அகம் 36/13
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் – அகம் 57/14
கடும் பரி புரவி கைவண் பாரி – அகம் 78/22
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ – அகம் 80/10
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி – அகம் 124/10
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் – அகம் 130/10
ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி/தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப – அகம் 154/11,12
முரசு உடை செல்வர் புரவி சூட்டும் – அகம் 156/1
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி/செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி – அகம் 160/11,12
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி/வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் – அகம் 187/6,7
நிரை மணி புரவி விரை நடை தவிர – அகம் 190/14
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி – அகம் 244/12
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி/இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப – அகம் 254/12,13
கொய் சுவல் புரவி கைவண் கோமான் – அகம் 270/8
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி/கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன் – அகம் 314/8,9
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி/கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது – அகம் 334/11,12
நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி/வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து – அகம் 344/9,10
பல் படை புரவி எய்திய தொல் இசை – அகம் 345/5
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி – அகம் 352/12
கடு நடை புரவி வழிவாய் ஓட – அகம் 354/7
குரங்கு உளை புரவி குட்டுவன் – அகம் 376/17
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/13
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் – புறம் 63/3
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/2
விறல் சினம் தணிந்த விரை பரி புரவி/உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் – புறம் 205/3,4
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி/கடல் மண்டு தோணியின் படை முகம் போழ – புறம் 299/2,3
தண்ணடை மன்னர் தார் உடை புரவி/அணங்கு உடை முருகன் கோட்டத்து – புறம் 299/5,6
வண் பரி புரவி பண்பு பாராட்டி – புறம் 301/13
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி/பண்ணற்கு விரைதி நீயே நெருநை – புறம் 304/3,4
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே – புறம் 368/7
வெம் விசை புரவி வீசு வளி ஆக – புறம் 369/7
உளை அணி புரவி வாழ்க என – புறம் 373/14
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும் – பட் 31
கொடி படு சுவல இடுமயிர் புரவியும்/வேழத்து அன்ன வெருவரு செலவின் – மது 391,392
நீரின் வந்த நிமிர் பரி புரவியும்/காலின் வந்த கரும் கறி மூடையும் – பட் 185,186
புரவியும் பூண் நிலை முனிகுவ – நற் 380/11
இளையரும் புரவியும் இன்புற நீயும் – அகம் 300/20
வால் உளை புரவியொடு வையகம் மருள – சிறு 92
ஆடு நடை புரவியும் களிறும் தேரும் – புறம் 240/1
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு – பெரும் 27
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 320
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 323
வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 232
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு/மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ – பதி 62/3,4
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி – அகம் 346/23
வினை மாட்சிய விரை புரவியொடு/மழை உருவின தோல் பரப்பி – புறம் 16/1,2
சிறு கோல் உளையும் புரவியொடு/யாரே – புறம் 352/15,16
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்