Skip to content

சொல் பொருள்

(பெ) 1. விளைநிலம், 2. அரசு இறை, வரி,  3. கொடை, பரிசு, 4. காத்தல் 5. அரசனால் அளிக்கப்பட்ட இறையிலி நிலம்,

சொல் பொருள் விளக்கம்

1. விளைநிலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 field, tax, gift, grant, care, protection, Land given free of rent by a king;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் – புறம் 379/6

நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மா இலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன்

வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/5,6

வருவாய்
புரவு வரி செலுத்துவதற்கும் ஆற்றாததாய் உள்ள சீறூர்

இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/7,8

இரவலர்கள் வரும்வரை, அண்டிரன் என்போன்
அவர்களுக்குக் கொடை கொடுப்பதற்காகச் சேர்த்துவைத்த யானைகள் போல

மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/9,10

மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்

சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே – புறம் 297/4,5

சிறிய ஊர்களை
இறையிலி நிலங்களாகக் கொள்வதை இவ்விடத்து வேண்டேம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *