சொல் பொருள்
(வி) பாதுகா, பேணு
சொல் பொருள் விளக்கம்
பாதுகா, பேணு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
guard, protect, save
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – மது 465-467 ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர், பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்