சொல் பொருள்
(வி) முதுகுகாட்டு, தோற்று ஓடு,
சொல் பொருள் விளக்கம்
முதுகுகாட்டு, தோற்று ஓடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
turn one’s back, show one’s back, in defeat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உடு உறும் பகழி வாங்கி கடு விசை அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் – குறி 170-174 இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன், தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால், (அப்)புண் உமிழ்ந்த செந்நீர் (அதன்)முகத்தில் பரவி வழிந்துநிற்க, புள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல், (அக் களிறு)தளர்ந்து திரும்பி ஓடிய பின்னர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்