Skip to content

சொல் பொருள்

(பெ) புறஞ்சேரி, நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம்

சொல் பொருள் விளக்கம்

புறஞ்சேரி, நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Outskirts of a city; suburb;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பறழ் பன்றி பல் கோழி
உறை_கிணற்று புறச்சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 75-77

குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட – (இருக்கும் பட்டினம்),

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *