Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல், 2. வேறுபட்ட நிலை, மாறுபட்ட சூழல்

சொல் பொருள் விளக்கம்

1. குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Standing in the back-yard of one’s house, seeking one’s favour

changed condition or situation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
———————- ———————– —————
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/1-8

நமது தெருவினை அடைய மெல்ல வந்து வந்து
அரிதாக வாயைத்திறந்து இனிய சொற்களைக் கூறி
ஒவ்வொருநாளும் தன் மேனியின் நிறம் வேறுபட்டுத் தங்கும் தலைவனின்
வருத்தம் தேங்கிய பார்வையினை நினைத்துப்பார் தோழி!
————————– ——————————- ——————–
(குறை இரத்தலை அன்றியும்)வேறொன்றைக் குறித்தது அவன் நீளப் பின்னிற்றல்.

முன் நாள்
கை உள்ளது போல்காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் – புறம் 211/10-12

முதல்நாள்
பரிசில் கையிலே புகுந்தது போல் காட்டி, அடுத்தநாள்
பொய்யைப் பெற்றுநின்ற உனது அன்பு இடம் மாறிய நிலைமைக்கு யான் வருந்திய வருத்தத்திற்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *