சொல் பொருள்
(பெ) முதுகில் பட்ட புண்
சொல் பொருள் விளக்கம்
முதுகில் பட்ட புண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Wound on the back of a person;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களி இயல் யானை கரிகால்வளவ சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே —————————- ————————— புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – புறம் 66/3-8 மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே! நேற்சென்று போரை எதிர்நின்று கொன்ற நினது வலிமை தோன்ற வென்றவனே! உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லவா! ————————————– ——————- (உன்னிடம்தோற்று முதுகிலே புண்பட்டு) அந்த முதுகில் பட்டபுண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்விட்டவன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்