சொல் பொருள்
(வி) 1. கைவிடு, 2. வலிமை இழ
சொல் பொருள் விளக்கம்
1. கைவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
abandon, lose vigour or strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது பிரியும்கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/12-14 விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல், அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக் கைவிட்டுச் செல்லும் செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்? உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6 தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து வலிமைகுன்றி இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்