சொல் பொருள்
(பெ) கஞ்சி,
சொல் பொருள் விளக்கம்
கஞ்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gruel
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி செல்லாமோ தில் சில் வளை விறலி —————— ——————– ———————- குடுமிக் கோமாற் கண்டு நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/1-7 நல்யாழையும், சிறுபறையையும் தோல்பையில் போட்டுக் கட்டி வைத்து அதைச் சுமந்து கொண்டு நாம் பகைப் புலத்தில் உள்ள அவனை நாடிச் செல்வோமாக, வளையல்கள் சில அணிந்த விறலியே! ——————————— ———————————- பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு வெறும் நீர் கலந்த பருக்கைச் சோறு தின்பதைக் கைவிட்டு வருவதற்கு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்