சொல் பொருள்
(பெ) 1. ஏமாற்றம், தனிமையுணர்வு போன்றவற்றால் ஏங்குதல், 2. வருந்துதல்
சொல் பொருள் விளக்கம்
1. ஏமாற்றம், தனிமையுணர்வு போன்றவற்றால் ஏங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lamenting, bemoaning, grieving
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் – கலி 128/12,13 என்னோடு கலந்து கூடி, அங்கே நான் இழந்துபோன என் அழகை நான் திரும்பப் பெறும்படி தழுவிக்கொண்டு புலம்புவதைத் தவிர்ப்பாயாக என்று எனக்கு அருள்செய்தான் போலவும், புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே – புறம் 380/15 பொற்பூவும், பொன்மாலையும் கொண்டு மகிழும் என் சுற்றத்தார் வருந்துதல் இலராயினர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்