சொல் பொருள்
(பெ) புலிப்பல் கோத்த சங்கிலி
சொல் பொருள் விளக்கம்
புலிப்பல் கோத்த சங்கிலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chain attaching tiger’s teeth.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலி புணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 61,62 வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர், புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில் போர்மேற்செல்லும் ஒரு தமிழ் மன்னனுக்கு, அவனது பாசறையில், அவனுக்கெனத் தனியாக ஒரு தனி இல்லத்தை யவனர்கள் அமைத்துக்கொடுத்ததாக முல்லைப்பாட்டு குறிப்பிடுகிறது. அந்த இல்லத்தின் முகப்பில் இந்தப் புலித்தொடரை யவனர் தொங்கவிட்டிருந்தனர் என்று இந்தச் செய்தி கூறுகிறது. இந்தப் புலித்தொடர் என்பதற்கு உரையாசிரியர் எவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள் தரவில்லை. இதனை ஆய்ந்து இந்தக் கட்டுரை ஆசிரியர் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அதனைப் பார்க்க இங்கே சொடுக்கவும். பார்க்க : புலித்தொடர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்