சொல் பொருள்
1. (வி) 1. தழுவு
2. (பெ) தழுவுவது
சொல் பொருள் விளக்கம்
1. தழுவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
embrace, embracing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான் புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ – கலி 94/18-20 கொக்கை உரித்ததைப் போன்ற வளைந்த மூட்டுவாய் போன்ற கூனியே! உன் கைகளுக்குள் நான் புகுந்து உன் மார்பினைத் தழுவினேனாயின் என் நெஞ்சிலே உன் கூன் அழுந்தும், உன் முதுகைத் தழுவினால் கிச்சுக்கிச்சு மூட்டியதைப் போல் தழுவமுடியாதபடி ஆவேன், அருள்வாயாக, வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – நற் 174/9-11 பிற பெண்களை விரும்பாத கொள்கையுடைய நம் தலைவன் இப்போது விரும்புகின்ற அந்தப் பரத்தையைத் தன் வளப்பம் பொருந்திய மார்பினில் சேர்த்தனன்; அவனைத் தழுவுவது எப்படி, அன்பு இல்லாத போது?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்