சொல் பொருள்
(பெ.அ) பொலிவிழந்த, புன்மையுடைய
சொல் பொருள் விளக்கம்
பொலிவிழந்த, புன்மையுடைய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
having no splendour, lackluster
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திறவா கண்ண சாய் செவி குருளை கறவா பால் முலை கவர்தல் நோனாது புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 130-132 திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி, கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது, ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில் பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் – கலி 3/4 தாங்க முடியாத காம நோயோடு பொலிவிழந்த நெற்றியைக் கொண்ட இவள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்