சொல் பொருள்
1. (வி) அவி, வேகவை, 2. (பெ) வேகவைத்தது,
சொல் பொருள் விளக்கம்
அவி, வேகவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
boil, anything that is cooked by boiling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9 மானின் இறைச்சி வேகவைத்த புலால் நாறும் பானையின் துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104 அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்) பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25 சர்க்கரைக் கட்டியுடன் அவரை விதைகளை வேகவைத்து உண்ணும் கொங்கர்களின் அரசனே! மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1 குற்றம் நீங்க இறைச்சியுடன் கூட்டி வேகவைத்து ஆக்கிய நெய் மிக்க வெள்ளிய சோற்றை யாமை புழுக்கின் காமம் வீட ஆரா – புறம் 212/3 ஆமையின் வேகவைத்த இறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு_உற்று – பெரும் 195 அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்