சொல் பொருள்
புழுத்துப்போதல் – யாருமே அறியாமல் இறந்து கிடத்தல்
சொல் பொருள் விளக்கம்
புழுப்பற்றுதல் புழுத்தல். மரம் புழுத்துப் போயிற்று என்பது அதனைத் தெளிவாக்கும். வாய்க்கு வராததைப் பேசுபவனை, “நீ பேசுவதற்கு உன் வாய் புழுத்துப்போகும்” என்பது வசை மொழி. சிலர் வாழ் நாளெல்லாம் பிறர்க்குக் கேடே செய்து வந்தால், “கேட்பாரற்றுப் புழுத்துத்தான் போவாய்” எனப்பழிப்பர். புழுத்துப்போதல் என்பது இறந்து நாறிப் புழுக்கள் உண்டாகி பக்கத்தே வரும் முடை நாற்றத்தால் பிறர் அருவறுக்கும் நிலைமையாகும். போதல் என்பது சுடுகாட்டுக்குக் கொண்டுபோதல்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்