சொல் பொருள்
பூசுணை – பருத்தவர்
சொல் பொருள் விளக்கம்
பூசுணைக்காய் பெரியது. பூசணி எனவும் வழங்கப்படும். சுணை என்பது வெண்ணிறமாகப் படர்ந்திருக்கும் ஒரு கொடி, அது மெல்லியது. ஆதலால் பூசுணை எனப்பட்டது. ஒருவர் பருத்தவராக இருப்பின் அவர்தம் பருமைத் தோற்றம் காயிற்பரிய பூசுணைக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தூண்டியிருக்கிறது. அவ்வகையில் வந்ததே, “அவர் ஒரு பூசுணைப்பழம்” என்பது “பூசுணைப்பழம் உருண்டு புரண்டு வருவதைப் பாருங்களேன்” என்று மென்னகை புரிவதும் காணக் கூடியதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்