சொல் பொருள்
விருதுநகர் வட்டாரத்தார் இடியாப்பத்தைப் பூச்சி என்கின்றனர்
பூச்சி – பாம்பு, அச்சுறுத்தல், கண்பொத்தல்
சொல் பொருள் விளக்கம்
பூச்சி என்பது நிழல்,வண்ணத்துப் பூச்சி, குடற் பூச்சி எனப் பல பொருள் குறித்தல் பொது வழக்கு. நாக்குப் பூச்சி என நாங்கூழ் குறிக்கப்படும். விருதுநகர் வட்டாரத்தார் இடியாப்பத்தைப் பூச்சி என்கின்றனர். நாக்குப் பூச்சி போன்றது என்னும் வடிவொப்புக் கருதிய வழக்கு இஃதாம்.
பூச்சி என்பது புழுப்பூச்சி என்னும் இணைச் சொல்லில் வருவது, புழு முதல் நிலையும், அதன் வளர்ச்சி பூச்சியுமாம். பூச்சிதாவும்போது அதன் நிழலைக் கண்டவன் அந் நிழலைப் பூச்சி என்று சொல்லிப் பின்னே எல்லா நிழலையும் குறித்ததாகலாம். பாம்பைக் கொடி என்பதுபோலப் பூச்சி என்பதும் உண்டு. நச்சுயிரியின் கடியைப் பூச்சிக்கடி என்பதும் வழக்கே. கண் பொத்தி ஆடும் ஆட்டம் கண்ணாம் பூச்சி எனப்படுகிறது. குழந்தைகளை அல்லது அஞ்சுபவரை அஞ்சி நடுங்கவைக்கப் பூச்சி காட்டல் உண்டு. அது அச்சுறுத்தல் பொருளதாம் ‘அப்பூச்சி’ எனவரும் நாலாயிரப்பனுவல் பகுதி குழந்தைகளைப் பெற்றவர்கள் அச்சுறுத்தல் தொடர்பை விளக்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்