சொல் பொருள்
பூச்சு வேலை – ஏமாற்று வேலை
சொல் பொருள் விளக்கம்
சுவர்க்குப் பூசுதல், ஈயம் பூசுதல் என்பவை பூசும் வேலையைக் குறிக்கும். பூசுதல், முகம் பூசுதல் (முகம் கழுவுதல்) எனவும் வரும். பூசுபவர் பூசகர். தெய்வப் படிவத்தை நீரிட்டுக் கழுவி வழிபாடு செய்பவர் அவராகலின், இனிச் சில போலி மாழை (உலோகங்)களை உயர் மாழைகளாகக் காட்ட விரும்புவர். பூச்சுவேலை செய்வர். அணிகலங்களில் பெரிய அளவில் பூச்சு (கவரிங்) வேலை நிகழ்கிறது. இவ்வேலை போலியானது. ஆதலால் பூச்சு வேலை என்பது ஏமாற்று வேலை என்னும் பொருளுக்கு உரிமையேற்று வழங்குவதாயிற்று. பூசி மெழுகல் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்