சொல் பொருள்
மென்மை மலர்ச்சி மெது என்னும் பல பொருள் தருவது
நோய்மை
பலாச்சுளையை மூடியிருக்கும் தோல்
சொல் பொருள் விளக்கம்
பூ என்பது மென்மையானது. பூப்போல என்பது மென்மை மலர்ச்சி மெது என்னும் பல பொருள் தருவது. பூவின் மென்மை யுடையவரைப் பூஞ்சை என்பது வழக்கம். அளவு கடந்த மென்மை உரிய நலமாகாது என்பதால் அது பெருமை கூறாமல் சிறுமை கருதிப் பூஞ்சை உடம்பு என மெலிவு, நோய்மை காட்டுவதாயிற்று. குமரி மாவட்டத்தில் பலாச்சுளையை மூடியிருக்கும் தோலைப் பூஞ்சை என்பது வழக்கம். அத்தோல் மிக மெல்லியது எளிதில் கிழிவது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்