Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. வண்டியில் அல்லது ஏரில் காளைகள் அல்லது குதிரைகளைப் பிணை, 2. இறுகக்கட்டு, 3. அணி, 4. (எதிர்ப்பினை)மேற்கொள், 5. கட்டுப்பாட்டுக்கு உட்படு, 6. பூசு, 7. உறுதி மேற்கொள், 2. (பெ) 1. அணி, 2. வளையம்

சொல் பொருள் விளக்கம்

1. வண்டியில் அல்லது ஏரில் காளைகள் அல்லது குதிரைகளைப் பிணை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

attach, as horses or bullocks to a carriage or plough; to yoke, fasten tightly, put on, wear, take a vow to oppose, be fettered, besmear, anoint, undertake a vow, ornament, jewel, ring, ferrule

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32

பூட்டுக! உன் புரவிகளையுடைய நெடிய தேரினை!

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் இறுகக்கட்டிய மங்கையர்,

ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/45-47

ஒருத்தி, கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு வண்டுகள் மொய்க்க, கையினால் விரட்டமாட்டாதவளாய், அணிந்துள்ள
மணங்கமழும் மாலையை அறுத்துக்கொண்டு அதனை ஓங்கிக்கொண்டு
வளைந்த உறுதியான தண்டையுடைய படகுக்குள் புகுந்துகொண்டாள்;

மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ எதிர் பூண்டாரும் தாம் – பரி 23/78,79

மேருமலையை மோதித்தாக்க மிக்கு வந்து மோதிய காற்றுத்தேவனின் மேம்பட்ட வலிமை எல்லாம்
அந்த மலையில் புகாதபடி எதிர்ப்பினை மேற்கொண்டாரும் ஆதிசேடனே!

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை – அகம் 7/3-5

சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.

பூணாஐயவி தூக்கிய மதில – பதி 16/4

பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள

நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/16,17

உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொள்ளும் உறுதியினை மேற்கொண்டு, அவனுக்காகப்
பலவாறாக சிந்தனைகளை ஓடவிடும் மனத்தோடு காத்திருந்து வருந்தினேன் நான் அன்றோ!

பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – அகம் 16/9

பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில்

போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16

போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி – குறு 227/1

புதிய வளையத்தைப் பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *