சொல் பொருள்
சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதல்
பூதியாக என்பது புழுதியை வாரித் தூற்றுவது போல் கூறுதல்
சொல் பொருள் விளக்கம்
சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதலை மறுத்துக் கூறுபவர் இப்படிப் பூதியாகச் சொன்னால் ஒப்ப முடியுமா? அதற்குச் சான்று என்ன என்பர். பூதியாக என்பது புழுதியை வாரித் தூற்றுவது போல் கூறுதல். பூதி=புழுதி. இவ் வழக்கு நெல்லை, முகவை வழக்குகளாக மட்டுமன்றித் திருப்பூர் வட்டார வழக்காகவும் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்