சொல் பொருள்
பூத்துப்போதல் – கண் ஒளி மழுங்கிப் போதல்
சொல் பொருள் விளக்கம்
பூத்தல் விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்து விட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். “உன்னைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போய்விட்டது” என்பதில் பூத்துப் போதல் ஒளி மழுங்கி அல்லது மங்கிப் போதல் புலப்படும். கண்ணில் உண்டாகும் ஒரு நோய். பூ விழுதல் கண்ணின் பாவையில் வெள்ளை விழுந்து விரிந்து படருமானால் பூவிழுந்ததாகக் கூறுவர். பூவிழுந்தால் பார்வை போய் விட்டது என்பது பொருள். அதன் வழியாக உண்டாகிய பூத்துப்போதல் என்பதற்கு ஒளி மழுங்கிப் போதல் பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்