சொல் பொருள்
(வி) பேணு, விரும்பு
சொல் பொருள் விளக்கம்
பேணு, விரும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cherish, regard, desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14 நின்னை எய்திய கணவனை விரும்பிப்பேணும் விருப்பத்தையுடையை ஆக என்று வாழ்த்தி எல்லை எம்மொடு கழிப்பி எல் உற நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் எம் வரை அளவையின் பெட்குவம் நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே – அகம் 200/10-14 பகற்பொழுதினை எம்முடனிருந்து கழித்து, இரவு வரும்போது நுமது நல்ல தேரினைப் பூட்டிச் செல்லுதற்கும் உரியீர், அதுவுமேயன்றி இரவில் எம் பதியில் தங்கிச் செல்வீராயின், யாங்களும் எங்களுக்கு இயன்ற அளவில் பேணுதல் செய்வோம் இது நும் கருத்துக்கு இசைவதாமோ? கூறுவீராக எமக்கு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்