சொல் பொருள்
(பெ) 1. திரும்பி வருதல், 2. திரும்பிச்செல்லுதல்,
சொல் பொருள் விளக்கம்
1. திரும்பி வருதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coming back, returning
going back, returning
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர் நோய் இலர் பெயர்தல் அறியின் ஆழல மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/16-18 அச்சம்வரும் இயல்பினையுடைய கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் தலைவர் தீங்கிலராய் மீண்டுவருதலை அறிவேனாயின் அழமாட்டா தோழி என் கண்கள் பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/10,11 பெருமை பெற்ற பரிசிலன் வாடினனாகத் திரும்பிச்செல்லுதல் என் நாடு இழந்ததனினும் மிகைன்னாது என நினைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்