சொல் பொருள்
(வி.அ) 1. மீண்டும், மறுபடியும், 2. (அதன்)பின்னும்
சொல் பொருள் விளக்கம்
1. மீண்டும், மறுபடியும்,
2. (அதன்)பின்னும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
again, even afterwards
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் தண் மாரி பேதை பித்திகத்து அரும்பே முன்னும் மிக சிவந்தனவே யானே மருள்வென் தோழி பானாள் இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே அருவி மா மலை தத்த கருவி மா மழை சிலைதரும் குரலே – குறு 94 அறியாமையுடைய பிச்சியானது பெரிய குளிர்ந்த மாரிப்பருவத்து முன்னரேயே அரும்புகள் மிகச் சிவந்தனவாய் வந்தன, நான் மனம் மயங்கி நிற்கிறேன், தோழி! நடு இரவில் இன்னும் தனியாகவே இருக்கிறவர் கேட்டால் மீண்டும் என்ன ஆவாரோ? பிரிந்திருப்பவராகிய தலைவர்- அருவிநீர் பெரிய மலையில் தத்திவீழ கூட்டமான கரிய மேகங்கள் முழங்கும் ஓசையை கூழையும் குறு நெறி கொண்டன முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் கண் துணை ஆக நோக்கி நெருநையும் அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் அறியாமையின் செறியேன் யானே – அகம் 315/1-6 தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன, இவள் பெண் என்னுமியல்பினை அமைந்தனள் என்று பலமுறை என் கண்களே துணையாகப் பார்த்து நேற்றும் மிகவும் ஐயுற்றது என் நெஞ்சம், அதன்பின்னும் அனது அறியாமையினால் யான் என் மகளைக் காவலுக்குள்வைக்காது ஒழிந்தேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்