சொல் பொருள்
(பெ) 1. பொழிதல், பெய்தல், 2. மழை, 3. மேகம்
சொல் பொருள் விளக்கம்
1. பொழிதல், பெய்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
showering, rain, cloud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 124 பிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும் பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முல் 6 பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் கேளார்-கொல்லோ தோழி தோள இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நகுவது போல மின்னி ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/8-12 வருமானத்திற்காகச் சென்ற குறைகள் அற்ற நம் காதலர் கேட்கமாட்டாரோ தோழி? தோளிலிருக்கும் ஒளிரும் வளைகள் நெகிழ்ந்துபோகுமாறு செய்த கலங்கிய துன்பத்தை எள்ளி நகையாடுவதுபோல மின்னி ஆர்ப்பரிப்பது போன்ற இந்தக் கார்காலத்து மழையைப்பெய்யும் முகிலின் இடிக்குரலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்