சொல் பொருள்
1. (வி) 1. பரு, பருமனாகு, 2. அதிகமாகு, மிகு,
2. (பெ.அ) 1. பெரிய, 2. அதிக அளவிலான
சொல் பொருள் விளக்கம்
(வி) 1. பரு, பருமனாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become stout, large, grow thick, increase, become numerous, plenty, big, great, immense
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24 மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பருமனாக நிற்கும் உன் இளமையான முலைகள், பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14 செவ்வியையுடைய நிணம் மிகுத்த புதிய வெண்சோற்றுக் கட்டியை நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66 விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள் பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 431,432 பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின் மிகுந்த நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்