சொல் பொருள்
(பெ) 1. செழுமை, 2. வெள்ளம்
சொல் பொருள் விளக்கம்
செழுமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
prosperity, opulence, flood
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே – பதி 24/15-17 நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும் அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன் செல்வம் மிக்க செழுமையை இனிதே கண்டறிந்தோம்; உணர்த்த உணரா ஒள் இழை மாதரை புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/36,37 ஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச் சேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்