சொல் பொருள்
பேசுதல் – திட்டுதல்
பேசுதல் – பாலுறவாடல்
சொல் பொருள் விளக்கம்
உரையாடல் பொருளில் வழங்கும் பேசுதல், திட்டுதல் பொருளிலும் வழங்குகின்றது. “என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நன்றாகப் பேசிவிட்டேன்” என்பதில் பேச்சு திட்டுதல் பொருளில் வந்தது, “என்ன பேச்சுப் பேசி என்ன? தைக்கிறவனுக்குத் தானே தைக்கும்” என்பதில் பேச்சுத் தைக்க வேண்டும் என்று கருதும் கருத்தால் வசைமொழி என்பது வெளிப்படை. “நீபேசி விட்டாய், நான் பதிலுக்குப் பேசினால் நீதாங்க மாட்டாய்” என்பதில் வசைக்கு வசையும் பேச்சாக இசைதல் விளங்கும்.
பேசுதல் வாய்ப் பேச்சைக் குறிக்கும். கையால் சொல்லுதலும் (கைக் குறியால் காட்டுதலும்) ஒரு வகைப் பேச்சே. முகக்குறி வெளிப்பாடு அகக் குறி வெளிப்பாடே என்பது வள்ளுவர் “கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்” குறிப்பார் அவர். இவ்வாறு சொல்லாமல் செய்தியறிதலும் குறிப்புப் பேச்சே. அஃது அற்ற இடமும் உண்டு. அது, “கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல” என்னும் இடம். பேச்சற்ற அவ்வின்ப இடம் ‘பேசுதல்’ என்பதால் பொதுமக்கள் வாக்கிலே பயிலுதல் வியப்பே. பேச்சில்லாமை காண்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்