சொல் பொருள்
பேச்சில்லாமை – பகைமை
சொல் பொருள் விளக்கம்
பேச்சில்லாமை, பேசாமைப் பொருளை நேராகத் தருவது. ஆனால் பேச்சு என்பது தொடர்பின் சிறந்த கருவியாக இருத்தலால் அதனை இல்லாமை மற்றைத் தொடர்புகளெல்லாம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் . இதனைப் ‘பேச்சு வார்த்தை’ எங்களுக்குள் இல்லை எனச் சொல்லும் வழக்கால் தெரிந்து கொள்ளலாம். பேச்சில்லாமை அமைதிப் பொருளை இழந்து, உறவின்மைப் பொருளுக்கு ஆயிற்று. அவ்வுறவு உடலுறவிற்கும் கூட உண்டாவதாயிற்று. பேசுதல் உடல் தொடர்பும், பேசாமை அஃதின்மையும் குறித்தல் வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்