சொல் பொருள்
பேச்சு – சந்தித்து உரையாடல்
வார்த்தை – எழுத்து வழியே போக்குவரத்து
சொல் பொருள் விளக்கம்
ஏதாவது சிக்கலானதைத் தீர்ப்பதற்குப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறுவது வழக்கம். நேரிடையாகக் கூடிக் கலந்துரையாடலும் பின்னே கடிதத் தொடர்பு கொள்ளலும் நடைமுறையாகலான் அவற்றைக் குறிக்கு முகத்தான் ‘பேச்சுவார்த்தை’ நடப்பதாகக் கூறினர். வார்த்தை என்பதற்குச் சொல் என்பது பொருளாயினும் இவண் எழுதும் செய்தியைக் குறித்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்