சொல் பொருள்
(வி) பெயர்ந்துசெல்(லுதல்), தாண்டு, கடந்துசெல்,
சொல் பொருள் விளக்கம்
பெயர்ந்துசெல்(லுதல்), தாண்டு, கடந்துசெல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shift one’s place, go past something
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மராஅ யானை மதம் தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து நாம அரும் துறை பேர்தந்து யாமத்து ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/4-8 தன் கூட்டத்தோடு சேராத யானையின் மதம் கெட மோதி வலியுற்று இழுக்கும் அச்சம் தருவதுமான வெள்ளத்தை அஞ்சாமையுள்ள ஒரு காட்டுப்பன்றியைப் போல நடுங்காமல் துணிவுடன் அச்சம்தரும் அரிய துறையைத் தாண்டி, நள்ளிரவில் இங்கு வருபவர்களும் உளரோ? உயர்ந்த மலையைச் சேர்ந்தவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்