Skip to content

சொல் பொருள்

(பெ) வேலைப்பாடமைந்த சிறு பெட்டி,

சொல் பொருள் விளக்கம்

வேலைப்பாடமைந்த சிறு பெட்டி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ornamental chest, box

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன
கார் எதிர் புறவினதுவே – குறு 233/1-4

கவலைக் கிழங்கைத் தோண்டிய அகன்ற வாயையுள்ள சிறிய குழி,
கொன்றையின் ஒளிரும் பூக்கள் பரவியதால், செல்வரின்
பொன்னை இட்டுவைக்கும் பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று
கார்காலத்தை எதிர்கொள்ளும் முல்லைநிலத்தில் உள்ளது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *