Skip to content

சொல் பொருள்

(பெ) பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை, 

பார்க்க : பஞ்சாய்

சொல் பொருள் விளக்கம்

பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A grass, cyperus rotundus tuberosus

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5

நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்.

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2

பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *