சொல் பொருள்
(பெ) 1. இளமையானது, 2. துன்பம்,
சொல் பொருள் விளக்கம்
இளமையானது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is young and tender, sorrow, distress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நெய்தல் பாசடை புரையும் அம் செவி பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென – நற் 47/1-4 பெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை உடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல் நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய இளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1 உறக்கம் இன்றி, பசலை பாய்ந்த கண்கள் துன்பம்கொண்டு நீர் சொரிய,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்