Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. பசிய, பசுமையான, பச்சை நிறமுள்ள, 2. புதிய

சொல் பொருள் விளக்கம்

பசிய, பசுமையான, பச்சை நிறமுள்ள,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

green, fresh

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22

பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு,

இது என் பைங்கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2

இது என் பைங்கிளி போன்ற மகள் எடுத்து விளையாடிய பச்சைக் கிளி

பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283

பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய

குவளை பைம் சுனை பருகி – புறம் 132/5

குவளைப்பூவையுடைய சுனையின் புதிய நீரைப் பருகி

படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8

ஒலிக்கின்ற வண்டுகள் ஆரவாரிக்கும் பசுமையான மாலையினை அணிந்த மார்பின்
with a chest with fresh garlands that are buzzed by bees that are there

சில விலங்குகளின் கண்கள் பசுமையாக இருக்கும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4

இங்கே பசுமையான கண்கள் என்பதற்கு ஈரம் படர்ந்த கண்கள் எனப் பொருள்கொள்ளுவது
பொருத்தமாகத் தோன்றுகிறது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *