சொல் பொருள்
பொட்டலாக்கல் – பயனைக் கெடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
பொட்டல் என்பது மேட்டு நிலம்: நீர்வளமற்று வான் மழையை நோக்கிப் புன் பயிர் செய்ய உதவுவது. அப்பயிர்க்கும் ஆகாத மேடு ம் உண்டு. அது வறும் பொட்டல், வெறும் பொட்டல், களத்துப் பொட்டல் எனப்படும். தலையில் விழும் வழுக்கையைப் பொட்டல் என்பதும் உண்டு. அப்பொட்டல் மயிர்வளம் இன்மை காட்டும் என்றால், இப்பொட்டல் பயிர் வளம் இன்மை காட்டுவது தெளிவு. இப்பொட்டலில் இருந்து பிறந்தது தானே தலைப்பொட்டல். வளமான நிலத்தையும் உழைத்துப் பாடுபடாமையால் பொட்டலாக்கிவிடுவார் உண்டு. அதுபோல் வளமான குடும்பத்தில் பிறந்தவருள் சிலரும் தம் குடியைப் பொட்டலாக்கிவிடுவர். அவரைப் பொட்டலாக்கப் பிறந்தவன் எனப் பழிப்பது வழக்கிடைச் செய்தி.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்