சொல் பொருள்
வேப்பிலை
சொல் பொருள் விளக்கம்
வாழைக்காய் முதலியவற்றைப் பழுக்க வைப்பவர் வைக்கோலால் மூடல், புகை போடல் ஆகியவை செய்வர். வேப்பிலையைப் போட்டு மூடிப் பழுக்க வைத்தலும் வழக்கம். அதனால், திருச்செந்தூர் வட்டாரத்தில் வேப்பிலையைப் ‘பொதும இலை’ என வழங்குகின்றனர். மூடி வைத்தல் என்பது பொதிதல் என்பதாம். ‘பொதி’ என்பது பொதிந்து வைக்கப்பட்ட மூடையாகும். பொதி என்பது பழங்கால நிறைப் பெயர்களுள் ஒன்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்